Posts

சிவா @ சிவன் சார் இயற்றிய புத்தகங்கள் - 1.ஏணிப்படிகளில் மாந்தர்கள்

Image
புத்தகம் 1.ஏணிப்படிகளில் மாந்தர்கள் - சிவா    Buy from Bookwomb ஏணிப்படிகளில் மாந்தர்கள் சிவா EANIPPADIGALIL MAANTHARGAL - A TREATISE ON SPIRITUALITY AND HUMAN SALVATION SHIVA கடின அட்டை / ஹார்ட்பௌண்ட்;  648 பக்கங்கள்;  மொழி: தமிழ் மற்றும் ஆங்கிலம்;  முதல் பதிப்பு: நவம்பர் 1986;  எட்டாம் பதிப்பு: ஆகஸ்ட் 2020. வாசகர்களுக்கு : இந்நூலாசிரியவர்கள் தன் விவரக் குறிப்பெதையும் தெரிவிக்க வேண்டாம் என ஆக்ஞை தந்ததையடுத்து, தவிர்க்கபட்டிருக்கிறது. - முரளி, மோகன்  பதிப்பாசிரியர்கள்.                                     *** புதிய பகுதிகள் சேர்ந்த புதுப் பதிப்பு. ஆன்மீகத் தேடல் உள்ளவர்களின் கைவிளக்கு!                                     *** ஏணிப்படிகளில் மாந்தர்கள்: ஆன்மிகத் தேடல் உள்ளவர்களுக்கு ஒரு கைவிளக்காக உதவும் அரிய நூல் இது. மனித ஆத்ம ரட்சாமிர்த செய்திகளை உள்ளடக்கிய இந்நூலில் மானுடப்பிறவி குறித்தும் உலக சமூக அமைப்பு பற்றியும் விஸ்தாரமாக விவரிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் வாழும் சமூகங்களின் பழக்க வழக்கங்கள், மனித கடைத்தேற்றத்திற்கு உதவிடும் குணநலன்கள், மனிதர்களிடையே உள்ள ஆன்மீக நிலை ஏற்றத்தாழ்வுகள